வணக்கம் உங்களை அங்கதம் ஆரா வலைத்தளதிற்கு அன்புடன் வரவேற்கிறேன். இந்தப் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கான குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை, அதிர்ஷ்ட யோக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பார்க்கலாம்.
நட்சத்திரத்தின் அமைப்பும் புராணக் கதையும்
பால்வெளிப் பாதையில், வண்டி அல்லது தேர் போன்ற வடிவத்தில் 5 நட்சத்திரங்கள் கொண்ட அமைப்புதான் ரோகிணி நட்சத்திரம்.
ரோகிணி நட்சத்திரம் அதிதேவதை: பிரம்மன், ரோகிணி, நட்சத்திரம் அதிபதி: சந்திரன், ரோகிணி நட்சத்திரம் விருட்சம் (மரம்): நாவல் மரம், ரோகிணி நட்சத்திரம் ராசி: ரிஷபம் (Taurus).
ரோகிணி நட்சத்திரத்துக்கு ஒரு பழமொழி உண்டு: "ரோகிணி ஏறுனா மாமனுக்கு ஆகாது" ஏன்னா, இந்த நட்சத்திரத்தில் பிறந்த கிருஷ்ணன் (Lord Krishnan) அவருடைய தாய் மாமன் ஆன கம்சனுக்கு அழிவு நேர்ந்தது. ஆனால், இது எல்லாத் தாய்மாமன்களுக்கும் பொருந்தாது, இதை நினைத்து பயப்படவேண்டாம், அவரவர் ஜாதகத்தில் தாய்மாமன் ஸ்தானம் எப்படி இருக்கிறதுன்னு பார்த்துதான் முடிவு செய்யணும்.
புராணங்கள் சொல்றது என்னனு பாத்தோமனா சந்திரனுக்கு 27 மனைவிகள். அவர்களுள் ரோகிணியிடம் மட்டும் சந்திரன் அதிக அன்பும் காதலும் கொண்டிருந்தாராம். அதனாலேயே இந்த நட்சத்திரம் காதல் நிறைந்த நட்சத்திரமாக பார்க்கப்படுகிறது.
குணாதிசயங்கள் (ரோகிணி நட்சத்திர இயல்பு)
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்க ரொம்ப அழகான தோற்றம் கொண்டிருப்பீங்க, பார்பவர்களை வசியம் செய்விங்க. மற்றவர்களை ஈர்க்கும் காந்தக் கண்கள் உங்களுக்கு உண்டு, பெண் என்றால் காந்த கண் அழகி என்றே சொல்லலாம்.
உங்களைப் பார்த்த உடனேயே கவர்ந்திழுக்கும் வசீகரம் (Charm) இருக்கும். எப்போதும் சிரித்த முகமும், இனிமையான பேச்சும் இருக்கும், அனைவரிடமும் ரொம்ப சுலபமாகப் பழகுவீர்கள், சுலபமா உங்க நட்பு வட்டத்துக்குள்ள கொண்டு வருவிங்க.
உங்களுக்கு கற்பனை வளம் அதிகம். கலைகள் மீது பற்று அதிகம் பாட்டு, இசை, நடனம், ஓவியம் போன்ற துறைகளில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும், அதில் வெற்றியும் பெருவிங்க.
எதையும் இரசனையோடு செய்வீர்கள். சுத்தமாக இருப்பதை ரொம்ப விரும்புவீர்கள், சுத்தம் சோறு போடும் இன்றத ரொம்ப நம்புவிங்க. அழகான ஆடைகள், நகைகள், விதவிதமான வாசனை திரவியங்கள் (Perfumes) இவையெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும்.
மற்றவர்களுக்கு உதவுவதில் தயக்கம் காட்ட மாட்டீர்கள். ஆனால், கொஞ்சம் பிடிவாத குணம் உங்களுக்கு உண்டு. நீங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால், எளிதில் பின்வாங்க மாட்டீர்கள்.
நீங்கள் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடியவர் , சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட மனம் கஷ்டப்படும். எளிதில் கோபமும் வரும் உங்களுக்கு.
இயற்கையை மிகவும் நேசிப்பீர்கள். நீர்நிலைகள், ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
வாழ்க்கை மற்றும் திசா பலன்கள் (Dasha Periods)
சந்திர திசை (குழந்தைப் பருவம்): நீங்கள் பிறக்கும்போதே சந்திர திசையில் பிறந்திருப்பீர்கள். இது குழந்தைப் பருவத்தில் முடிந்துவிடும். உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் குழந்தைப் பருவம் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெற்றோரின் அரவணைப்போடும் கழியும், அதனால் பெற்றோரும் சில பலன் பெறுவார்கள்.
செவ்வாய் திசை (பள்ளிப் பருவம்): செவ்வாய் திசை 7 வருஷம் நடைபெறும். பள்ளிப் பருவத்தில் செவ்வாய் திசை நடக்கும். செவ்வாய் பலமாக இருந்தால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும், அதில் வெற்றியும் பெருவிர்கள். படிப்பிலும் ரொம்ப சிறந்து விளங்குவீர்கள்.
இராகு திசை (இளமைப் பருவம், உயர்கல்வி, வேலை, திருமணம்): உங்கள் இளமைப் பருவத்தில் ராகு திசை நடக்கும். இந்தக் காலத்தில்தான், உயர் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் திருமணம் இவை எல்லாம் நடக்கும். இராகு பகவான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இராகு இருந்தால், அதாவது உங்கள் ஜாதகத்தில் 2, 4, 6, 10 போன்ற இடங்களைத் தொடர்பு கொண்டிருந்தால். தொழிலிலும் கல்வியிலும் சிறந்த முன்னேற்றம். எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
குரு திசை (40 முதல் 55 வயது – பொற்காலம்): உங்களுக்கு 40 முதல் 55 வயது வரை குரு திசை நடக்கும். இதை உங்கள் வாழ்வின் பொற்காலம் என்றே சொல்லலாம். குரு நல்ல நிலையில் இருந்தால் தொழில் அல்லது உத்தியோகத்தில் பெரிய அந்தஸ்தும், புகழும். சமுதாயத்தில் நல்ல மதிப்பு. பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம், சொத்து போன்ற வசதிகள் உங்களைத் தேடி வரும், கொடுக்கற தெய்வம் கூரைய பிச்சினு குடுக்கும்னு சொல்ற மாறி பேரும் புகழும் உங்கள தேடி வரும்.
சனி திசை (ஓய்வுக் காலம் – முதுமை): உங்கள் ஓய்வுக் காலத்தில் சனி திசை நடக்கும். சனி பகவான் பலமாக இருந்தால் முதுமையில் பெரிய உடல்நலக் குறைபாடுகள் ஏதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வீர்கள். பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்விர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் வந்து, தல யாத்திரைகள் செல்வீர்கள்.
பரிகாரங்கள்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்குச் சில எளிய பரிகாரங்கள்:
- சந்திர பகவானை தொடர்ந்து வணங்குங்கள். திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற ஆடை அணிந்து, அர்ச்சனை செய்யுங்கள்.
- நாவல் மரத்தை வழிபடுங்கள். நாவல் மரத்தை தண்ணீர் விட்டு வளருங்கல், மரத்தடியில் தீபம் ஏற்றுங்கள்.
- தண்ணீரைக் கொண்டாடுங்கள், அதாவது நீர்நிலைகளுக்குச் செல்வது, தண்ணீர் தானம் செய்வது நல்லது.
- கலைகளில் ஈடுபாடு உங்களுக்கு ஒரு இயற்கையான பரிகாரம் ஏன்று சொல்லலாம் இசை, நடனம், ஓவியம் உங்கள் மனதை நிம்மதியாக வைக்கும்.
- பிடிவாதத்தையும், உணர்ச்சிவசப்படுவதையும் கொஞ்சம் குறைத்துக்கொண்டால், உறவுகளிடம் சண்டை சச்சரவு குறையும்.

Post a Comment