வணக்கம் நண்பர்களே!
தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு தயாராகும் பெரும்பாலான தேர்வர்கள் பொதுவாக TNPSC தேர்வுகளிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் முக்கியமாக TNPSC GROUP 4 தேர்வுகளில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் ஆனால் அதை விட சுலபமான மத்திய அரசு தேர்வுகள் உள்ளன, அதில் தேர்வர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அதே நேரத்தில், மத்திய அரசு நடத்தும் தேர்வுகளான RRB, SSC, Banking போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து பலர் கலந்து கொள்வது குறைவாகவே உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம் சரியான தகவல்கள் மற்றும் தேவையான படிப்புப் புத்தகம் (Tamil materials) தமிழில் எளிதாக கிடைக்காததே ஆகும்.
குறிப்பாக RRB Group D போன்ற தேர்வுகள் தற்போது அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நல்ல எதிர்கால வாய்ப்புகள் இருப்பினும், பலர் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் பற்றிய தெளிவான தகவல் இல்லாமல் தமிழ்நாடு தேர்வர்கள் இருக்கின்றனர்.
RRB Group D தேர்வு விவரங்கள்
RRB Group D தேர்வு என்பது இந்திய ரயில்வே துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் முக்கியமான தேர்வாகும். இதில் Track Maintainer, Helper, Assistant போன்ற பல்வேறு பணிகள் அடங்கும்.
தேர்வு முறை (Exam Pattern)
RRB Group D தேர்வில் பொதுவாக கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன:
கணிதம் (Mathematics), பொது அறிவியல் (General Science),பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள், Reasoning & Aptitude, இந்த தேர்வு முழுவதும் கணினி வழி (CBT Mode) மூலம் நடத்தப்படுகிறது. கேள்விகள் அனைத்தும் Objective Type வடிவில் இருக்கும்.
பாடத்திட்டம் (Syllabus)
கணிதத்தில் எளிய கணக்குகள், சதவீதம், விகிதம், நேரம் மற்றும் வேலை போன்ற தலைப்புகள் இடம்பெறும். Reasoning பகுதியில் Logical Thinking, Coding-Decoding, Puzzle போன்றவை கேட்கப்படும்.
ஆனால் பெரும்பாலான தேர்வர்களுக்கு சிரமமாக இருப்பது General Science பகுதியே ஆகும். காரணம், அந்த கேள்விகள் பெரும்பாலும் CBSE பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்படுகின்றன. குறிப்பாக Physics, Chemistry, Biology போன்ற பாடங்கள் ஆங்கிலத்தில் படிப்பது பல தமிழ் வழி மாணவர்களுக்கு சிரமமாக உள்ளது.
இதனால், CBSE புத்தகங்கள் தமிழில் கிடைத்தால் மாணவர்கள் மிகவும் எளிதாக புரிந்து கொண்டு படிக்க முடியும். இந்த தேவையை கருத்தில் கொண்டு நாம் கர்நாடக அரசு CBSE பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது, அந்த பாடப்புத்தகங்களை நம்முடைய வலைதளத்தில் இணைத்து உள்ளேன். அந்த புத்தகங்கள் தேர்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழில் பாடப்புத்தகங்கள் அதிகமாக கிடைத்தால், தமிழக மாணவர்கள் TNPSC மட்டும் அல்லாமல் RRB, SSC போன்ற மத்திய அரசு தேர்வுகளிலும் அதிக அளவில் வெற்றி பெற முடியும் என்பது உறுதி.
CLASS - 6 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS 6 ►
CLASS - 7 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS 7 ►
CLASS - 8 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS 8 ►
CLASS - 9 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS 9 ►
CLASS - 10 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS 10 ►
Post a Comment