வணக்கம் உங்களை அங்கதம் ஆரா வலைத்தளதிற்கு அன்புடன் வரவேற்கிறேன். இந்த பதி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கான குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை, அதிர்ஷ்ட யோக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பார்க்க போகிறோம்?
கார்த்திகை நட்சத்திரத்தின் அமைப்பு மற்றும் புராணக் கதை
பால்வெளி பாதையில் கத்தி போன்ற வடிவத்தில் ஆறு நட்சத்திரங்கள் இணைந்து காணப்படும் அமைப்பு தான் கார்த்திகை நட்சத்திரம். இரவு வானத்தை கவனமாக பார்த்தால், இந்த நட்சத்திரக் கூட்டம் சிறிய தீப்பொறிகள் ஒன்றாகக் குவிந்தது போல மின்னும். பழங்காலத்திலிருந்தே இதை மக்கள் பாதை காட்டியாகவும், காலநிலை மாற்றங்களை அறியும் அடையாளமாகவும் பார்த்துள்ளனர்.
ஆன்மீக ரீதியாகவும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. இந்த நட்சத்திரம் தமிழ் கடவுள் முருகன் உடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருநாளில் வீடுகள் முழுவதும் விளக்குகள் ஏற்றி இந்த நட்சத்திரத்தை வழிபடுவது வழக்கம். அந்த ஒளி இருளை நீக்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கொண்டாடுகின்றனர்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியம், நேர்மை மற்றும் தலைமைத்துவம் கொண்டவர்கள். அவர்கள் எந்த சவாலையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மனப்பாங்கு உடையவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு, வானத்தில் ஒரு சிறிய நட்சத்திரக் கூட்டமாக தோன்றும் கார்த்திகை, இயற்கை, ஆன்மீகம் மற்றும் மனித வாழ்க்கை ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு அழகான சின்னமாக இன்று வரை மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்த கார்த்திகை நட்சத்திரத்தினுடைய அதிதேவதை அக்னி. இந்த நட்சத்திரத்தினுடைய அதிபதி சூரியன். விருட்சம் மரம் அத்தி மரம்.
கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசியில் வரும். கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதம், 3ம் பாதம், 4ம் பாதம் லாம் ரிஷப ராசியில் வரும்.
புராண கதையில் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறியானது ஆறு தீ சுடர்களாக மாறி ஆறு குழந்தைகளாக அவதரித்தது. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகை பெண்கள் பாதுகாத்து வளர்த்து வந்தனர்.
அதன் காரணமாக இந்த ஆறு பெண்களுக்கும் சிவபெருமான், கார்த்திகை பெண்களாக நீங்கள் வானில் சுடர்விட்டு பிரகாசிப்பீர்கள் அப்படின்னு வரம் கொடுத்திருக்கார். இந்த ஆறு பெண்கள் நட்சத்திர கூட்டம்தான் கார்த்திகை நட்சத்திரம்.
இந்த கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு.
இந்த நட்சத்திரத்தின் பறவை வந்து மயில். அதனாலதான் முருகப்பெருமான் மயிலை வாகனமாக கொண்டிருக்கார்.
துக்கம், வெற்றி இரண்டுக்கும் முக்கியத்துவம் தரும் நட்சத்திரமாகும். இது வந்து ஒரு போர்க்குணம் கொண்ட நட்சத்திரமாகும். இது ஒரு நெருப்பு நட்சத்திரமாகும்.
குணாதிசயங்கள்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த நீங்க நல்ல தன்னம்பிக்கை உள்ளவங்க, புகழைச் சம்பாதிக்கக் கூடியவங்க. உங்க முகத்துல ஒரு ஒளி இருக்கும். அழகான தோற்றமும், வலுவான உடலமைப்பும் உங்களுக்குக் கிடைச்சிருக்கும்.
உங்க உடம்பு கொஞ்சம் வெப்பமாகவே இருக்கும். ஏன்னா, கார்த்திகை நட்சத்திரம் இயற்கையிலேயே வெப்பத்தன்மை கொண்டது, இதுக்கு அதிபதி அக்னி பகவான் (தெய்வமான தீ) அதனாலதான் உஷ்ணம் இயல்பாகவே கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்.
முக்கியமா, உங்களுக்கு பேச்சாற்றல் நிறைய உண்டு. விவாதம் பண்றதுல, வாதம் பண்றதுல உங்களை மிஞ்சறவங்க யாருமே கிடைக்க மாட்டாங்க.
ஒரு லட்சியத்தை அடையணும்னு நீங்க முடிவெடுத்துட்டீங்கன்னா, அதுக்காகக் கடுமையாக உழைச்சு, ரத்த வியர்வை கூட வடிச்சு, அந்த லட்சியத்தை அடைஞ்சே தீருவீங்க.
எந்தப் பிரச்சனை வந்தாலும், அதன் நல்லதையும் கெட்டதையும் நன்றாக ஆராய்ந்து, ரெண்டு பக்கமும் பார்த்துதான் முடிவு எடுப்பீங்க. அவசரமாக எதையும் செய்யமாட்டீர்கள்.
ஆனால், உங்களுக்குக் கோபம் சீக்கிரம் வந்துடும். கொஞ்சம் பிடிவாதம் உண்டு. தன்னம்பிக்கை நல்லதுதான், ஆனால் சில சமயம் அது ஆணவமாகவும், கர்வமாகவும் மாறிவிடும். மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு அவர்களுடன் அனுசரித்துப் போக மாட்டீர்கள். இதனால், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும். அதனால் சில சண்டைகளும் சச்சரவுகளும் வர வாய்ப்பு இருக்கிறது.
சில நேரங்களில், உங்களோட சொந்த உறவினர்களும் நண்பர்களுமே கூட உங்கள் மேல் விரோதத்தைக் காட்டுவாங்க. ஏன்னா, நீங்க சூழலுக்குத் தகுந்தபடி கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்றது (சரிப்பட்டுப் போவது) கிடையாது. அதாவது, "நான் எடுத்த முடிவுதான் சரி" அப்படின்னு கடைசிவரைக்கும் உறுதியா இருப்பீங்க. மத்தவங்க அதை ஏத்துக்கிட்டு உங்களோட இணைஞ்சுபோக மாட்டாங்க. அதனாலதான் உங்களுக்கும் அவங்களுக்கும் இடையே முரண்பாடு வருது.
பிறந்த உங்களுக்கு ஒரு பெரிய சிறப்பு இருக்கு நீங்க அதிகமான வெற்றிகளை அடைவீங்க. புகழும், மரியாதையும் (கௌரவம்) உங்களைத் தேடி வரும். இன்னொரு விஷயம் உங்களோட தெய்வ பக்தி மிகவும் தீவிரமானது. கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. சமையல் செய்வதும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். மட்டுமில்லாம, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு ஜீரண சக்தி (digestive power) கூட இயற்கையிலேயே அதிகமாக இருக்கும்.
உங்களுடைய மிகச்சிறந்த நல்ல குணம் என்னன்னு கேட்டா நீங்க உங்க சொந்தக் குழந்தைகளை மட்டுமல்ல, வேறொருத்தருடைய குழந்தைகளையும் தாய்போல் பாசத்துடன் வளர்ப்பீங்க. ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் அவர்கள் மீது உங்களுக்கு அதிக அக்கறையும் பரிவும் இருக்கும். அவர்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைவீங்க.
நீங்க எளிய வாழ்வு வாழணும்னு ஆசைப்படுவீங்க. சமூக சேவையிலும், நாட்டுக்காக உழைப்பதிலும் உங்களுக்கு அதிக அக்கறை உண்டு.
எங்கே உங்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்குமோ, அங்கேதான் நீங்க வேலை செய்வீங்க. சுதந்திரம் இல்லைன்னா, எவ்வளவு பெரிய வேலையா இருந்தாலும் அதை உதறிட்டு வந்துடுவீங்க. ஏமாற்றத்தையும், பின்னடைவுகளையும் தாங்கிக்க முடியாது உங்களால். எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா சந்திக்கணும் அதுதான் உங்கள் மனசு.
வாழ்க்கை மற்றும் திசா பலன்கள்
சூரிய திசை: கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவங்க சூரிய திசையில்தான் பிறப்பீங்க. குழந்தைப் பருவத்திலேயே இது முடிஞ்சிடும். அப்ப உங்களுக்கு விவரம் தெரியாது.
சந்திர திசை — 10 வருஷம் (படிக்கும் வயது): அடுத்து சந்திர திசை ஆரம்பிக்கும். இது 10 வருஷ காலம். இது தான் படிக்கிற வயசு. உங்கள் பிறப்பு ஜாதகத்துல, லக்னத்திலிருந்து சந்திரன் எப்படி தொடர்பு கொண்டிருக்காரோ அப்படித்தான் உங்கள் படிப்பு அமையும். சந்திரனுக்கு 8ம் பாவமும், 12ம் பாவமும் தொடர்பு இல்லாம இருந்தாலே போதும், தடையில்லாத கல்வி அமையும். குறிப்பா துலா லக்னம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, 8ம் பாவம் கார்த்திகையிலோ, ரோகிணியிலோ, மிருகசீரிடத்திலோ விழும். இந்த 3 நட்சத்திரங்களில் எந்தத் திசை நடக்குமோ, அப்ப அவங்களுக்கு மதிகெட்ட ஜாதகம் ஆகிடும். அப்ப படிப்புல கவனம் செலுத்த முடியாது. அதனால, அப்படி இருந்தால் குழந்தைகளை நீங்க கவனமாகப் பார்த்துக்கணும்.
செவ்வாய் திசை — 7 வருஷம் (படிப்பும் விளையாட்டும்): அப்புறம் செவ்வாய் திசை வருது 7 வருஷம். இதுவும் படிக்கிற காலகட்டத்தில்தான். செவ்வாய்க்கு 8, 12ம் இடச் சம்பந்தம் இல்லாம இருந்தால், நல்ல கல்வி கிடைக்கும். உங்களுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் (Martial Arts) மேல் ரொம்ப விருப்பம் கராத்தே (Karate), குங்பூ (Kung Fu), சிலம்பாட்டம். சிலருக்கு ஸ்கவுட் (Scout), என்சிசி (NCC) பிடிக்கும். 5ம் இடமும் செவ்வாயும் பலமா இருந்தா, ஸ்போர்ட்ஸ் (Sports) நல்லா வரும் ஈட்டி எறிதல், குத்துச்சண்டை, குண்டு எறிதல், கத்திச்சண்டை, கபடி. வீரமான செயல்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகம். சிலருக்கு மிலிட்டரி (Military), போலீஸ் (Police) துறைகளிலும், சிலருக்கு கேட்டரிங் (Catering), சமையல் கலைகளிலும் ஆர்வம் இருக்கும். உங்கள் ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் எப்படித் தொடர்பு கொண்டிருக்காங்களோ அப்படித்தான் தொழிற்கல்வி அமையும்.
வாழ்க்கையின் முக்கிய பகுதி (20 முதல் 60 வயது): 20 வயது முதல் 60 வயது வரைதான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலம். இதில்தான் வருமானம், குடும்பம், குழந்தைகள், அந்தஸ்து, புகழ், சொத்து, கௌரவம் எல்லாமே அமையும். இந்தக் காலத்தில்தான் உங்களுக்கு ராகு திசை மற்றும் குரு திசை நடக்கும். இவை 2ம் இந்த நட்சத்திரக்காரருக்கு மிக முக்கியமான திசைகள்.
ராகு & குரு திசைகள் — வெற்றிக்கான திறவுகோல்: உங்கள் ஜாதகத்தில் ராகுவும் குருவும் 2, 4, 6, 10 ஆம் பாவங்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அது அதிர்ஷ்ட யோகம். நீங்க எந்தத் துறையில் இருந்தாலும், பேர் சொல்லும் அளவுக்கு உயர்வீங்க. சொந்தத் தொழில் செய்தால், அது நன்றாக வளரும். பணமும் புகழும் கிடைக்கும். அடுத்தத் தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைப்பீங்க. பண வரவு பல மடங்கு பெருகும். குரு (வியாழன்) பொதுப் பணத்திற்குக் காரகர். அதனால் உங்கள் பண வரவு அபரிமிதம்! உத்தியோகம் பார்க்கிறவங்களா இருந்தால் எதிர்பார்க்கிற பதவி உயர்வு, நல்ல வருமானம், புகழ் எல்லாம் கிடைக்கும். 9ம் இடமும் ராகுவும் பலமா இருந்தால் வெளிநாடு போய் வேலை பார்ப்பீங்க. நிறையப் பணம் சம்பாதிப்பீங்க. செல்வச் செழிப்போடு வாழ்வீங்க.
எச்சரிக்கை: ராகுவும் குருவும் 5, 9 ஆகிய பாவங்களுடன் தொடர்பு பெற்றிருந்தால் பொருளாதாரத்தில் அவ்வளவு சிறப்பு இருக்காது. சம்பாதிக்க வேண்டிய வயசில சம்பாதிக்க முடியாத நிலை வந்துடும். அதனால், உங்க ஜாதகத்தை நல்லா பார்த்துக்கோங்க.
ராகு திசையில்தான் திருமணமும் குடும்பமும்: இந்த ராகு திசையில்தான் உங்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம், நல்ல குடும்ப அமைப்பு எல்லாமே கிடைக்கும். காதலை நீங்க விரும்பமாட்டீர்கள். 7ம் இடமும் ராகுவும் திருமணத்துக்கு சாதகமான தொடர்பு கொண்டிருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். சிறிய வயதிலேயே கல்யாணமும், குழந்தை பாக்கியமும் உண்டு. இல்லைன்னா, குடும்பத்தில் நிம்மதி இருக்காது சண்டையும் சச்சரவும் வரும்.
முக்கிய எச்சரிக்கை: ராகுவும் குருவும் 8ம் இடம் அல்லது 12ம் இடத் தொடர்பு வச்சிருந்தால் திசை நடக்கும்போது, ஒவ்வொரு விஷயத்துக்கும் போராட வேண்டியிருக்கும். போராட்டமே வாழ்க்கையாகிடும்.
சனி திசை (50 முதல் 70 வயது) — வயோதிக காலம்: 50 வயது முதல் 70 வரை சனி திசை ஆரம்பிக்கும். சனி பகவான் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் உங்கள் வயோதிக காலம் ரொம்ப சந்தோஷமா இருக்கும். குறிப்பா 5, 7, 11 தொடர்பு இருந்தால், நோய் இல்லாம கடைசி வரை நிம்மதியா வாழலாம். திட்டமிட்டு சேர்த்து வச்ச பணத்தை வச்சு, பேரன் பேத்திகளோட, மருமகன் மருமகளோட சந்தோஷமா காலங்கழிக்கலாம்.

Post a Comment