வேத ஜோதிடத்தில் அஸ்வினி நட்சத்திரம் முதலாவது நட்சத்திரமாகும். பால்வெளி அண்ட பாதையில் அஸ்வினி நட்சத்திர அமைப்பு மூணு நட்சத்திர கூட்டம் இணைந்து குதிரை தலையை போன்ற வடிவம் கொண்டது, அஸ்வினி நட்சத்திரம் வேகம், புத்துணர்ச்சி மற்றும் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதன் வடிவம் ஒரு மனிதன் குதிரை சவாரி செய்வது போன்று கருதப்படும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை அஸ்வினி தேவர்கள் (தெய்வீக மருத்துவர்கள்). இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். நட்சத்திர மரம் எட்டி மரம். மேஷம் ராசியில் நட்சத்திரத்தின் பாகம் ஒன்று முதல் நான்கு வரை உள்ளது.
அஸ்வினி நட்சத்திரம் புராணக் கதை
சூரியனின் மனைவியான சஞ்சனா தேவி சூரிய பகவானுடைய வெப்பம் தாங்காமல் தனியாக வசித்து வந்தாங்க, சூரியனின் வெப்பம் குறைந்த வேளையில் சூரியனோடு கூடி பெற்ற குழந்தைகள் தான் இந்த அஸ்வினி தேவர்கள் (தெய்வீக மருத்துவர்கள்). சூரிய குழந்தைகள் குதிரை முகம் கொண்ட இரட்டையர்கள் ஆவார்கள். ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு முன்பு இவர்கள் தங்க இரதத்தில் அமிர்தம் பாத்திரத்துடன் வானில் வளம் வருவதாக புராணத்தில் கூறப்படுகிறது.
அதனால் தான் நம் முன்னோர்கள் சூரியன் தோன்றுவதற்கு முன்பே எழுந்து இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அஸ்வினி தேவர்கள் (சூரியன் மகன்கள்) அந்த நேரத்தில் வானத்தில் வலம் வருவதால் நமக்கு அமிர்தம் (மருந்து) கிடைத்து ஆரோக்கியம் பெற முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால் காலை எழுந்து தவம் செய்யும் பொது நம் உடலில் அமிர்தம் சுரந்து நோயற்ற வாழ்வு வாழ்ந்து, மரணமில்லா நிண்ட வாழ்வு அடைய முடியும் என்பதே ஆகும்.
அஸ்வினி நட்சத்திரம் குணாதிசயங்கள்
அஸ்வினி நட்சத்திரதில் பிறந்தவர்கள் மன உறுதியும் வலிமையான உடல் அமைப்பு கொண்டவர்களாக இருப்பீர்கள். புத்தி கூர்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். ஏந்த நொடியுலும் சுய கௌரவத்தை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். துடிப்பும் சுறுசுறுப்பான குணமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். எதிலும் ஆர்வமாக செயல்படுவீர்கள். சோம்பேறியாக இருப்பது உங்களுக்கு பிடிக்காது. ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கணும் அப்படின்னு நினைப்பீர்கள். அது மட்டுமில்லாமல் அதை முயற்சியிலும் கொண்டு வருவீர்கள். எதையும் புதிதா செய்யணும் அப்படின்னு நினைப்பீர்கள். சிலர் ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பீர்கள். இலக்கை நோக்கியே நீங்கள் முன்னேற வேண்டும் அப்படின்னு நினைப்பீர்கள்.
இலக்கை அடையற வரை ஓயாம முயற்சி செஞ்சு இலக்கை அடைவீர்கள். எதையும் உடனடியாக முடிக்கணும் அப்படின்னு விரும்புவீர்கள். உங்களுக்கு ஒரு யோசனை தோன்றிச்சுன்னா அதை உடனடியா செயல்படுத்தணும் இல்லை என்றால் உங்களுக்கு தலையே வெடிப்பது போல இருக்கும். எதைப் பற்றியும் வேகமாக புரிந்து கொண்டு சரியான முடிவெடுப்பதில் நீங்கள் வல்லவர்கள். ஆனா உங்ககிட்ட வேகம் இருக்கிற அளவுக்கு கொஞ்சம் விவேகம் இருக்காது. உங்களுடைய கண்களுக்கு பிறரை ஈர்க்கும் கவர்ச்சி இருக்கும். அதாவது காந்தக் கண்கள் அப்படின்னு சொல்வாங்க. பொறுப்பில்லாமல் மற்றவங்களைப் பற்றி நினைக்காம இருப்பவர்கள் என்றாலும் நீங்கள் மற்றவர்களின் துயரம் கண்டு உதவி செய்வீர்கள். உங்களுக்கு வாகனங்கள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் ரொம்ப வேகமா வாகனம் ஓட்டணும் அப்படின்னு விருப்பப்படுவீர்கள். கடவுள் பக்தியை கைவிட மாட்டீங்க. பாரம்பரியத்தை விரும்புவீர்கள். இருப்பினும் நவீன விஷயங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.
அஸ்வினி நட்சத்திர வாழ்க்கை மற்றும் தசா பலன்கள்
கேது தசா பலன்கள்: பிறக்கும் போது கேது திசையில பிறந்திருப்பீங்க நீங்கள். விவரம் அறியாத குழந்தை பருவத்திலேயே இந்த திசை முடிந்துவிடும்.
சுக்கிர தசா பலன்கள்: அடுத்து சுக்கிர திசை ஆரம்பிக்கும். பள்ளி படிக்கிற வயசுல தான் இந்த திசை நடைபெறும். உங்களுடைய பிறப்பு ஜாதகத்துல சுக்கிர பகவான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தின் மூலம் 8 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொள்ளாமல் இருந்தாலே போதும் படிப்பில் கெட்டிகாரர் தான். பிறர் பார்த்து பொறாமை அடையும் அளவுக்கு ஆர்வமாக படிப்பீங்க நீங்க. சுக்கிரன் உடன் நல்ல தொடர்பை பெற்றிருப்பதனால் இந்த காலகட்டங்களில் உங்களுடைய அப்பாக்கு நல்ல யோகமான பலன்கள் நடைபெறும். அப்பாக்கு யோகமான பலன்கள் நல்ல வருமானம் இருந்தால் தான நீங்கள் நல்லா படிக்க முடியும். அதனால சுக்கிர திசை இளமையில் நடப்பவர்களுக்கு அவங்க தந்தைக்கு யோகத்தை தரும். சுக்கிர பகவான் உங்களுக்கு என்ன மாதிரியான தொடர்பை பெற்றிருக்காரோ அதைப் பொறுத்து அந்த துறையில உங்களுக்கு படிப்பு சிறப்பினைத் தரும். படிக்கும் வயசுல உங்களுக்கு காதல் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுவீங்க. இசையை விரும்பி கேட்பீங்க நீங்க.
வாழ்க்கையின் முக்கிய பகுதி: ஒரு மனிதனுக்கு 20 முதல் 60 வயது வரை தன் வாழ்நாளில் மிக முக்கியமான காலமாகும். அதாவது தொழில், உத்தியோகம், குடும்பம், குழந்தைகள், அந்தஸ்து, புகழ், சொத்து இவை அனைத்தும் இந்த காலகட்டத்தில் தான் அமையும். அதனால் இந்தக் காலகட்டத்துல உங்களுக்கு நடக்கக்கூடிய திசை என்னென்ன வருதுன்னு பார்த்தீங்கன்னா சந்திர திசை, சூரிய திசை, செவ்வாய் திசை, ராகு திசை நடைபெறும். ஆகவே இந்த சூரியன், செவ்வாய், சந்திரன், ராகு இந்த நான்கு கிரகங்களும் உங்களுடைய ஜாதகத்துல பொருளாதாரத்திற்கு சாதகமான நல்ல இடத்தை பெற்றிருக்க வேண்டும். அப்படி பொருளாதாரத்திற்கு சாதகமான நல்ல தொடர்பு பெற்று திசை நடந்தால் அற்புதமான யோக அமைப்புகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.
சூரிய தசா பலன்கள்: உங்களுக்கு சூரிய திசை நடக்கும் சமயத்துல திருமண வயசுல இருப்பீங்க. சூரியன் நல்ல தொடர்புல இருந்தால் அரசு பணி கிடைக்கும். சிலர் இராணுவத்தில் பணி புரிய வாய்ப்பு உண்டு. குடும்பத்தை அதிகம் நேசிப்பீங்க. உங்களுக்கு ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மீது பாசம் அதிகமா இருக்கும். எதிலும் தலைமை பொறுப்பேற்று நடத்த விரும்புவீங்க. அதுமட்டுமில்லாமல் சொந்தமா தொழில் செய்றவங்களுக்கு சூரிய தசா காலம் மிக சிறப்பான காலமா இருக்கும். உங்க ஜாதகத்துல சந்திரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் இரண்டாம் இடத்தையோ, நாலாம் இடத்தையோ, ஆறாம் இடத்தையோ, பத்தாம் இடத்தையோ நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தின் மூலம் தொடர்பு கொண்டிருந்தால் தொழில்ல நல்ல சிறப்பு, பேரும் புகழும் அடைவீங்க. தொழில் வளர்ச்சி அற்புதமா இருக்கும். பண வரவு அபரிமிதமா இருக்கும்.
சந்திர தசா பலன்கள்: சந்திர திசையில நீங்க வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் எல்லாம் கிட்டும். கப்பல் மற்றும் விமானப் பயணம் என அனைத்து விதமான பயணங்களையும் விரும்புவீங்க. அதிகமா இன்ப சுற்றுலா செல்ல விரும்புவீங்க. சந்திரன் நல்ல தொடர்பில் இருந்தால் ஆண், பெண் இருவருக்கும் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.
செவ்வாய் தசா பலன்கள்: அடுத்து செவ்வாய் திசை உங்களுக்கு 35-45 வயசு காலகட்டங்களில் நடக்கும். செவ்வாய் நல்ல பலமான தொடர்பு கொண்டிருந்ததுன்னா கண்டிப்பா உங்களுக்கு சொந்த வீடு, வாகனம், சொத்து அமைப்பு சிறப்பினைத் தரும். சிலர் இயற்கை விவசாயத்தை விரும்புவீங்க. யாருக்கும் அடி பணிந்து நடக்க மாட்டீங்க. சுதந்திரமாக செயல்பட விரும்புவீங்க. கஷ்டத்தை சமாளிக்கும் திறமையில் கைதேர்ந்தவங்களா இருப்பீங்க நீங்க. உங்க பிறப்பு ஜாதகத்துல செவ்வாய் பலம் குறைந்திருந்தால் இந்த காலகட்டங்களில் உங்களுக்கு வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் உங்கள் ஜாதகதில் செவ்வாய் இடம் அறிந்து கொள்வது முக்கியம். அதனால் பயணங்களில் கவனம் தேவை. அதுமட்டுமில்லாமல் அதிக பொறுப்புடைய பதவிகளில் (IAS, IPS, MLA, MP) இக்காலங்களில் அங்கம் வகிப்பீங்க.
இராகு தசா பலன்கள்: அடுத்து உங்களுக்கு 45-60 வயசு இந்தக் காலகட்டங்கள்ல ராகு திசை நடைபெறும். ராகு பகவான் உங்களுடைய பிறந்த ஜாதகத்துல நல்ல தொடர்பை பெற்றிருப்பது ரொம்ப அவசியம். இல்லைன்னா சில தடைகளையும் துன்பங்களையும் சந்திக்க வேண்டி வரும். உங்கள் குழந்தைகளால் நிம்மதி குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கு. அதனால் இராகு பகவான் பலத்தைப் பொறுத்து தான் இந்தக் காலகட்டத்தை நீங்கள் சமாளிக்க முடியும். அது உங்க ஜாதகத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
குரு தசா பலன்கள்: அடுத்து குரு திசை. இது ஓய்வு காலமான 60 வயசுக்கு மேல் தான் உங்களுடைய ஜாதகத்துல வரும். குரு உங்க ஜாதகத்துல நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தின் மூலம் 1, 3, 5, 7, 9, 11-ஆம் பாவங்களை தொடர்பு கொண்டிருந்தால் சந்தோஷமான முதுமை காலத்தை கழிப்பீங்க. உங்கள் அனுபவங்களை உங்கள் வம்சத்திற்கு பகிரும் உன்னத அமைப்பு உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் நோய் நொடி அதிகம் இல்லாமல் சந்தோஷமாக புனித தல யாத்திரை செல்வீங்க. ஆன்மீக எண்ணம் உங்களுக்கு அதிகமாக இருப்பதால் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீங்க. மற்றவர்களுக்கு நல்லதையே செய்யும் நல்ல குணமுடையவர்களாக நீங்கள் இருப்பீங்க. உங்களுக்கு மன்னிக்கும் குணம் அதிகமா இருக்கும். பேரன் பேத்தியுடன் சந்தோஷமாக வாழ்க்கையை கழிப்பீங்க.
குறிப்பா இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் தெய்வீக அருள் பெற்றிருப்பீங்க. புராணம், வேதம், சாஸ்திரம், ஜோதிடம், அறிவியல் முதலியவற்றில் பிரியம் கொண்டிருப்பீங்க. நேர்மை, உண்மை, நீதி வழிகளை பின்பற்றி நடக்க விரும்புவீங்க.
பரிகாரங்கள்
சித்தர்களுக்கெல்லாம் சித்தர் மகான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்ன சொல்றார்னா, ஒரு மனிதன் காமம், கல், களவு, கொலை, பொய் இவ் ஐந்தையும் கைவிட வேண்டும். இவ் ஐந்தும் ஒரு மனிதனுக்கு கொடிய துக்கத்தை உண்டு பண்ணும்.
அதாவது மது அருந்தக்கூடாது, மனைவியைத் தவிர மற்ற பெண்களை தங்கையாகவும் தாயாகவும் தான் பார்க்க வேண்டும், எந்த ஒரு உயிருக்கும் தீங்கு செய்ய கூடாது அதாவது உயிர் பலி செய்யக்கூடாது, மாமிசம் உண்ணக்கூடாது. அடுத்தவர் பொருள் மீது ஆசைப்படக்கூடாது, திருடக்கூடாது. அடுத்து எக்காரணத்தை கொண்டும் பொய் சொல்லக்கூடாது. இந்த ஐந்துலயும் ஏதாவது ஒன்னு பண்ணா கூட மற்றது பின்தொடரும் அப்படின்னு சொல்றாரு.
அதாவது மது அருந்துண காமம் வரும், காமம் வருவதனால் பிறர் பொருள் மீது ஆசைப்படுவான், பிறர் பொருள் மீது ஆசைப்படுவதனால் கொலை செய்வான், கொலை செய்வதனால் பொய் பேசுவான். இது ஒன்றன்பின் ஒன்றாக தொடரும் அதனால இவ்ஐந்தையும் கைவிட வேண்டும் அப்படின்னு சொல்றாரு. அப்படியென்றால் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் நல்லொழுக்கம், புறங்கூறாமை, நல்லறிவு, பொதுநல நோக்கம், இன்சொல் ஆடல், உயிரிரக்கம் போன்ற நல்ல குணங்களை கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும் அப்படின்னு வள்ளலார் சொல்றாரு.
அதுமட்டுமில்லாமல் ஏழை எளியவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளையும், அனைத்து உயிர்களிடமும் அன்பும் நேசமும் கொண்டிருக்க வேண்டும் என்று. இதைத்தான் ஜீவகாருண்ய ஒழுக்கம் அப்படின்னு வள்ளலார் சொல்றாரு.
மேற்சொன்ன நல்ல குணங்களையும் ஜீவகாருண்யத்தையும் யார் ஒருவர் கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு உபகார சக்தி துணையாய் இருந்து காப்பாற்றும்.
அதுமட்டுமில்லாமல் நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று சுற்றம் சூழ குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வார்கள் என்கிறார் வள்ளலார். அதனால் மேற்சொன்ன இந்த நல்ல செயல்களையே நீங்கள் பரிகாரமாக வாழ்க்கையில் கடைபிடிச்சீங்கன கண்டிப்பா செல்வ செழிப்புடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வீர்கள்.
Post a Comment