வணக்கம் உங்களை அங்கதம் ஆரா வலைத்தளதிற்கு அன்புடன் வரவேற்கிறேன். இந்தப் பதிவுல பரணி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கான குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை, அதிர்ஷ்ட யோக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பார்க்க போகிறோம்.
பரணி நட்சத்திரத்தின் அமைப்பு மற்றும் புராணக் கதை
பரணி நட்சத்திரம் பால்வெளி பாதையில் 3 நட்சத்திரங்களை கொண்ட முக்கோணம் போன்ற வடிவல் இருக்கும்.
பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை எமன் மற்றும் துர்க்கை. பரணி நட்சத்திர அதிபதி சுக்கிரன். விருட்சம் மரம் நெல்லி மரம். மேஷ ராசியில் பரணி நட்சத்திரம் இருக்கு.
பரணி நட்சத்திரத்துக்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க,
'பரணி மும்மீன் அடுப்பு போல'
அப்படிம்பாங்க. அதாவது மூன்று முண்டுகள் (கற்கள்) வைத்த அடுப்பு போல இந்த நட்சத்திரம் இருக்கும் அப்படின்னு சொல்லுவாங்க.
உணவு சமைக்க அடுப்பு எப்படி பயன்படுகிறதோ, அதுபோல் பரணி நட்சத்திரத்தில பிறந்தவர்கள் மற்றவருடைய நலனுக்காக உதவி செய்வாங்க.
சமையல் தொழில் செய்றவங்களும் சரி, அன்னதானம் செய்றவங்களும் சரி, சமையற்கூடங்கள் மற்றும் உணவு தொழில் செய்பவர்கள் எல்லாருமே முதன் முதல்ல அடுப்பு பத்த வைக்கிறதுக்கு இந்த பரணி நட்சத்திரதில் தான் நேரம் தேர்வு பண்ணுவாங்க.
இலட்சுமி கலை நிறைந்த நட்சத்திரம் இது தான். அது மட்டுமில்லாமல் யானை, கடல், சந்திரன் இந்த மூன்றும் எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிக்காது, திரும்பத் திரும்ப பார்க்க தோணும்.
இந்த மூன்றுல ஒன்றான யானையை இந்த நட்சத்திரத்திற்கு குறிப்பிடுறாங்க. அதாவது யானையை பார்க்கப் பார்க்க திரும்ப பார்க்கணும்னு தோணும். யானையினுடைய முன்புறத் தோற்றம் வந்து லட்சுமி கடாட்சத்தை குறிக்கும். யானைக்கு ஈர்க்கும் சக்தி இருக்குது.
புராணங்களில் என்ன சொல்லப்பட்டிருக்குன்னா, எமன் தான் பூமிக்கு வந்த முதல் மனிதன் என்றும், அவர்தான் இந்த பூமியில் உயர் துறந்த முதல் மனிதன் என்றும் சொல்லப்பட்டிருக்கு.
பால்வெளி அண்டத்தில் இருக்கக்கூடிய அபபரணி என்னும் பகுதிக்கு எமதர்மராஜன் தான் இராஜன். அபபரணி என்பதின் அர்த்தம் 'கொண்டு செல்லும் நீர்' அப்படின்னு பொருள்.
அதாவது இங்கு இறந்து போகிற அனைத்து ஆன்மாக்களும் இந்த அபபரணி பகுதிக்கு தான் பயணம் ஆகுது.
இறந்து போகிற உயிர்கள் பால்வெளி பாதையில நீரோட கலந்து அபபரணி பகுதிக்கு செல்லும். பிறகு இந்த ஆன்மா மலை நீரோடு கலந்து பூமியில் பொழிந்து, மண்ணில் கலந்து, செடியில் வளர்ந்து, பயிரில் நிறைந்து, அதை உண்ணும் தந்தையின் சுக்கிலமாக (உயிர் அணு) மாறி, தாயின் சுரோணிதத்தில் (கர்ப்ப பை) கலந்து, கருவாகி மனிதனாக இந்த பூமியில் பிறக்கிறது.
இப்படி பிறந்த மனிதன் வளர்ந்து, வாழ்ந்து, மீண்டும் இறக்கிறான். நம்ம உடம்பில் இருக்கக்கூடிய குதப்பகுதி (ஆசன வாய்) எமனுடைய பகுதியாகும். இந்த வழியா உயிர் பிரிஞ்சா மீண்டும் எமனுடைய பகுதிக்கு போயிட்டு திரும்ப இந்த பூமியில வந்து பிறக்கணும். இந்த சுழற்சி தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும்.
பரணி நட்சத்திரம் பிறப்பைப் பற்றியும், வாழ்தலைப் பற்றியும், மறுபடியும் மறு பிறப்பைப் பற்றியும் குறிக்கிற நட்சத்திரமாகும்.
அதனாலதான் திருவருட்பிரகாச வள்ளளார், உடலை விட்டு இந்த ஆன்மாவை பிரிய விடக்கூடாது, இந்த தேகத்தை நித்திய தேகமாக மாத்தணும், மரணமிலாத பெருவாழ்வு வாழணும் அப்படின்னு சொல்றாரு.
குணாதிசயங்கள்
பரணி நட்சத்திரத்தில பிறந்தவங்க தரணி ஆளுவாங்க அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு. அதாவது இதுக்கு என்ன அர்த்தம் அப்படின்னா, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த ஆளுமை மற்றும் நிர்வாகத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். போராட்டங்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க சிலர் வந்து அரசாங்கத்திலயும் சரி, தனியார் துறையிலயும் சரி நல்ல அதிகாரம் பெற்ற பதவியில் இருப்பார்கள்.
வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலையும் புத்திசாலி தனமாக சமாளித்து அதில் வெற்றி பெறுவார்கள். பிறருக்கு ஆறுதல் கூறுவதில் நீங்கள் வல்லவர்கள். உங்களுக்கு ஊர் சுற்றுவது ரொம்ப பிடிக்கும். பரணி நட்சத்திர காரர்கள் இயற்கையை ரொம்ப ரசிப்பார்கள்.
வாழ்வில் அதிக இரசனை உங்களுக்கு இருக்கும். உங்களிடம் காதல் மற்றும் காம உணர்வும் கொஞ்சம் அதிகமாவே இருக்கும். எந்த ஒரு விஷயத்திலயும் தனித்து செயல்படவே பரணி நட்சத்திரகாரர்கள் விரும்புவார்கள்.
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, உங்களுக்குன்னு எதையும் வச்சுக்காம, வாழ்வில் ஏழை மற்றும் துயருற்றவங்களுக்கு ஆறுதல் சொல்வதுடன் கையில் இருக்கிற பொருளை கொடுத்து உதவக்கூடிய மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தாய் மற்றும் தந்தை மீது உங்களுக்கு மிகுந்த மதிப்பும் பாசமும் இருக்கும்.
உங்களை யாராவது கடுமையான சொல் கொண்டு பேசினா கூட அதை நீங்க வந்து பெருசா எடுத்துக்க மாட்டீங்க. பரணி நட்சத்திரம் கிட்ட இருக்கக்கூடிய ஒரு நல்ல விசயம் என்னன்னா, மனம் கவரும் சிரிப்பாலும் நல்ல பேச்சாலும் குணத்தாலும் எல்லாத்தையும் கவர்ந்திடுவார்கள். எல்லாரும் உங்க மேல பைத்தியமாக இருக்கிறபடி செஞ்சிடுவீங்க.
நடிப்புத் துறையில் இருக்கிறவங்களுக்கு பரணி நட்சத்திரம் மிகவும் சிறப்பான நட்சத்திரம்.
வருங்கலாம் பத்தி எல்லாம் பெருசா யோசிக்கவே மாட்டீங்க. வாழ்க்கை முழுவதும் அனுபவிச்சு வாழணும் அப்படின்னு விரும்புவிர்கள். அதே நேரத்துல எந்த ஒரு ஆபத்து வந்தாலும் கலங்க மாட்டீகர்கள், அதை சந்திக்க தயங்க மாட்டீகர்கள். உங்களுக்கு மனசாட்சிக்கு எதிரா எதையும் செய்யணும் அப்படின்ற எண்ணம் கொஞ்சம் கூட இருக்காது. உள்ளது உள்ளபடியே அனைவரிடமும் தெரிவிப்பீகர்கள்.
இசை, நடனம் போன்ற கலைகளில் ரொம்ப இடுபாடுடன் இருப்பீர்கள். எதிலும் நேர்த்தியா இருக்கணும் அப்படின்னு விரும்புவீர்கள். விதவிதமான வாசனை திரவியங்கள் எல்லாம் பயன்படுத்துவீர்கள்.
சாப்பாடு ரொம்ப விரும்பி சாப்பிடுவீர்கள். அதாவது ருசியான உணவை ரசிச்சு சாப்பிடுவீங்க. உங்களை வந்து சாப்பாட்டுப் பிரியர் அப்படின்னு சொல்லலாம். உணவை ரசித்து சாப்பிட்டுட்டு அதை செஞ்சவங்களை பாராட்ட தயங்கவே மாட்டீர்கள்.
புதுப்புது ஆடை போட விரும்புவீர்கள். லேட்டஸ்ட் டிசைன்ஸ்லாம் விரும்புவீங்க. அதே மாதிரி ஆபரணங்கள் அணிவதில் ரொம்ப விருப்பமா இருப்பீர்கள்
கடவுள் அருள் இருக்கு. ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு பணம் வரும். குறிப்பா உங்க ஜாதகத்துல ஐந்தாம் இடமும் ராகுவும் பலமா இருந்துச்சு அப்படின்னா வணிகம், பந்தயம், யூக வணிகம் இதன் மூலம் நல்ல வருமானம் வரும்.
உங்களுக்கு அதிகமா நகைச்சுவை உணர்வு இருப்பதால் உங்களை சுற்றி இருப்பவங்களை எந்நேரமும் சிரிக்க வச்சுக்கிட்டே இருப்பீர்கள்.
வாழ்க்கை மற்றும் திசா பலன்கள்
சுக்கிர திசா பலன்கள்: பிறக்கும் போது சுக்கிரன் திசையில் பிறந்திருப்பீர்கள். சுக்கிர பகவான் உங்களுடைய ஜாதகத்துல நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தின் மூலம் நல்ல தொடர்பினை பெற்றிருந்தா உங்கள் தந்தைக்கு இக்காலகட்டங்கள் சிறப்பான யோகத்தை தரும். அதன் மூலம் நீங்க மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நன்றா படிப்பீர்கள். கலைகளில் ஆர்வ மிகுதியால் நாட்டியம், இசை, பாட்டு, ஓவியம், நடிப்பு போன்ற துறைகளில் ஈடுபடுவீர்கள். படிப்பை விட கலைகளில் தான் உங்களுக்கு ஈடுபாடு அதிகமா இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஆழமா தெரிந்து கொள்ளணும்னு விரும்புவீர்கள். அதாவது ஏதாவது ஒரு கலையை நீங்க காதலிப்பீர்கள்.
சூரிய மற்றும் சந்திர திசா பலன்கள்: இந்த நட்சத்திரத்துல ஒன்னாவது பாதம், இரண்டாவது பாதத்துல பிறந்திருந்தீங்கன்னு வச்சுக்கோங்க, உங்களுக்கு சூரிய திசை 18 வயசு காலகட்டங்களில் ஆரம்பிக்கும். உங்களுடைய ஜாதகத்துல சூரியன் மற்றும் ஒன்பதாம் இடமும் பலமா இருந்துச்சு அப்படின்னா உங்க அப்பாவின் தொழிலையே நீங்களும் சிறப்பா எடுத்து நடத்துவிங்க. இதே இந்த நட்சத்திரத்துல மூணாம் மற்றும் நாலாம் பாதத்தில் பிறந்தவங்களுக்கு சூரியன் மற்றும் சந்திரன் திசையும் சரி படிக்கிற வயசுலயே வந்துடும். அப்போ சூரியன், சந்திரன் இந்த இரண்டு கிரகங்களும் உங்க ஜாதகத்துல நல்ல அமைப்பில் இருந்தா நல்லா படிப்பு வரும்.
வாழ்க்கையின் முக்கிய பகுதி: பொதுவா ஒருவருக்கு 20-60 வயசு வரை தன் வாழ்நாளில் மிக முக்கியமான பகுதியாகும். அதாவது தொழில், உத்தியோகம் அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம், குடும்பம், குழந்தைகள், புகழ், சொத்து, கௌரவம் இவை அனைத்தும் இந்த காலகட்டத்துல தான் அமையும். இந்த காலகட்டத்துல தான் உங்களுக்கு சூரியன், செவ்வாய், சந்திரன், ராகு, மற்றும் குரு திசை என ஐந்து கிரகங்களின் திசையும் வரிசையா நடைபெறும். இந்த ஐந்து கிரகங்களும் பொருளாதாரத்திற்கு சாதகமா நல்ல தொடர்பை பெற்றிருக்க வேண்டும். அப்போ தான் முழு பலனும் அடைய முடியும்.
அதிர்ஷ்ட யோகங்கள்: அதிலும் முக்கியமா பரணி 1 மற்றும் 2 பாதத்துல பிறந்தவங்களுக்கு சந்திரன், செவ்வாய், ராகு இந்த மூன்று கிரகங்களும் உங்களுடைய ஜாதகத்துல நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தின் மூலம் 2ம் இடத்தையோ, 4ம் இடத்தையோ, 6ம் இடத்தையோ, 10ம் இடத்தையோ கண்டிப்பா தொடர்பு கொள்ள வேண்டும். இந்த அமைப்பில் பிறந்தவங்களுக்கு இந்த காலகட்டங்கள்ல அதிர்ஷ்ட யோகம் தேடி வரும். இதே பரணி நட்சத்திரம் மூணாம் பாதம், நாலாம் பாதத்துல பிறந்தவங்களுக்கு செவ்வாய், ராகு, குரு இந்த மூன்று கிரகங்களும் நன்றாக இருக்கணும். அதாவது இந்த மூன்று கிரகங்களும் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தின் மூலம் 2, 4, 6, 10 ஆம் பாவங்களை தொடர்பு கொண்டிருந்தால் அப்படின்னா, இந்த காலகட்டங்கள் இவங்களுக்கு அதிர்ஷ்ட யோகத்தை தரும்.
பெண்கள் மற்றும் தொழில்: குறிப்பா இந்த பரணி நட்சத்திரத்துல் பிறந்தவங்க ராகு திசை நடக்கும் போது பெண்கள் விஷயத்துல் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இல்லைன்னா பெண்கள் சம்பந்தமான விஷயங்கள்ல் இவங்க அவமானப்பட வேண்டியது வரும். சிலருக்கு உணவு சம்பந்தமான தொழில் வந்து சிறப்பினைத் தரும்.
திருமணம் மற்றும் குடும்பம்: சுக்கிரன் மற்றும் செவ்வாய் இந்த கிரகங்கள் எல்லாம் பலமா இருந்தால் உங்களுக்கு சிறிய வயதிலேயே திருமணம் நடந்துரும். குடும்பத்தை அதிகமா நேசிப்பீர்கள். குடும்பத்தை விட்டு பிரிய மாட்டீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதையே முக்கியமாக கருதுவீர்கள். குடும்ப வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கை துணை உங்களை அன்பால ஆட்சி செய்வார்கள். ஏழாம் பாவம் விதி கொடுப்பினை கெட்டிருந்தா உங்களுக்கு ரெண்டு திருமணம் அமைய வாய்ப்பிருக்கு.
பொருளாதாரம் மற்றும் தொழில்: சிலர் வந்து விளம்பரம், விவசாயம், ஃபேஷன், மாடலிங், சினிமா போன்ற துறைகளில் பிரகாசிப்பீர்கள். உங்க ஜாதகத்துல செவ்வாயும் ராகுவும் பொருளாதாரத்துக்கு சாதகமான அமைப்பில் இருந்துச்சு அப்படின்னா இந்த திசை நடக்கும்போது நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள். உங்கள் வீடு வந்து மிக அழகாக இருக்கும்படி கட்டுவீர்கள். வாகன யோகம், சொத்து அமைப்பு இதெல்லாம் உங்களுக்கு சிறப்பினைத் தரும். அதிக வசதி வாய்ப்புகள் வந்தாலும் உங்க வேலையை நீங்களே செய்து கொள்ளணும்னு நினைப்பீர்கள். சிலருக்கு மோட்டார் வாகன தொழில், சோசியல் மீடியா தொழில்கள் கூட அமையும்.
குரு திசா பலன்கள்: அடுத்து உங்களுக்கு குரு திசையில உடல் எடை கூடும், ஹார்மோன் மற்றும் இருதய பிரச்சனை வரும். ஆனா உங்க ஜாதகத்துல குரு வந்து நல்ல தொடர்பை பெற்றிருந்தால் அதாவது நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தின் மூலம் 5, 7, மற்றும் 11 ஆம் பாவங்களை தொடர்பு கொண்டிருந்தார்னு வச்சுக்கோங்களேன் உங்களுக்கு இந்த பாதிப்புகள் எல்லாம் எதுவும் வராது. உங்க வாழ்க்கையை சந்தோஷமா கழிப்பீர்கள். சேர்த்த பணத்தை கொண்டு திட்டமிட்டு வாழ்வீர்கள்.
முதுமைக்காலம்: சனி உங்கள் ஜாதகத்தில் பலமாக இருந்தால் 80 வயசுக்கு மேல சந்தோஷமாக வாழ்க்கையை கழிப்பீர்கள். உங்களுக்கு அளவான பக்தி இருக்கும். தான தர்மம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொள்வீர்கள். தான் கஷ்டப்பட்டாவது மற்றவருக்கு உதவும் இனிய குணம் உங்களிடம் இருக்கும். எதையும் வெளிப்படையாக பேசி எல்லோரையும் அன்பால் கவர்வீர்கள். மருமகன், மருமகள், பேரன் பேத்திகள் இவர்கள் எல்லோருடைய அன்பையும் பெறுவீர்கள். உங்களை பார்த்து யாராவது நீங்க எப்படி இருக்கிறீங்க அப்படின்னு கேட்டா, நீங்க எப்பவுமே நான் சந்தோஷமா இருக்கிறேன் அப்படின்னு தான் சொல்லுவீர்கள்.
பரிகாரங்கள்
மரணத்தை வென்ற மகான் சித்தர்களுக்கெல்லாம் சித்தர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்ன சொல்றார்னா, ஒரு மனிதன் மது, காமம், கொலை, களவு, பொய் இவ் ஐந்தையும் கைவிட வேண்டும். இவ் ஐந்தும் ஒரு மனிதனுக்கு கொடிய துயரத்தை உண்டு பண்ணும் அப்படின்னு சொல்கிறார். அதாவது மது அருந்தக்கூடாது, மனைவியைத் தவிர மற்ற பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் தான் பார்க்க வேண்டும், எந்த ஒரு உயிருக்கும் தீங்கு பண்ண கூடாது அதாவது கொலை செய்யக்கூடாது, மாமிசம் உண்ணக்கூடாது, பிறர் பொருள் மீது ஆசைப்படக்கூடாது, திருடக்கூடாது, எக்காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்லக்கூடாது. இந்த ஐந்துலயும் ஏதாவது ஒன்ன செஞ்சா கூட மற்றது பின்தொடரும் அப்படிங்கிறாரு.
அப்படியென்றால் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் அப்படின்னா, நல் அறிவு, பொதுநல நோக்கம், நல் ஒழுக்கம், புறங்கூறாமை, இன்சொல் ஆடல், போன்ற நல்ல குணங்களை கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும் அப்படின்னு சொல்கிறார்.
மேற்சொன்ன நல்ல குணங்களையும் ஜீவகாருண்யத்தையும் யார் ஒருவர் கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு உபகார சக்தி துணையாய் இருந்து காப்பாற்றும் அப்படிங்கிறார்.
அதனால் மேற்சொன்ன இந்த நல்ல செயல்களையே நீங்க பரிகாரமா வாழ்க்கையில் கடைபிடிச்சீங்கனா கண்டிப்பா செல்வ செழிப்புடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வீர்கள்.

Nice
ReplyDeletePost a Comment