வணக்கம் உங்களை அங்கதம் ஆரா வலைத்தளதிற்கு அன்புடன் வரவேற்கிறேன். இந்தப் பதிவுல ஆயில்யம் நட்சத்திரத்தில் (Ayilyam / Ashlesha) பிறந்த உங்களுக்கான குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை, அதிர்ஷ்ட யோக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் அனைத்தையும் பார்க்க போகிறோம்.
நட்சத்திரத்தின் அமைப்பும் புராணக் கதையும்
பால்வெளிப் பாதையில், பாம்பு போன்று வடிவில் அல்லது சக்கரம் போன்ற வடிவத்தில் அமைந்த நட்சத்திரம்தான் இந்த ஆயில்யம். மிகவும் மர்மமான யாரும் புரிந்து கொள்ள முடியாத, சக்திவாய்ந்த வடிவம் இது.
இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை நாகங்கள் (Nagas ) குறிப்பாக ஆதிசேஷன் (Adishesha). அதிபதி (கிரக அதிபதி) புதன் பகவான் (Mercury / Budhan). இதன் விருட்சம் (புனித மரம்) புன்னை மரம் (Punnai / Mastwood tree). ஆயில்யம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் கடக ராசியில் (Cancer) வரும்.
ஆயில்ய நட்சத்திரத்துக்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க: "ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது" என்று சொல்வது வழக்கம். இது ஏன் என்றால், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொஞ்சம் ஆளுமைத் திறன் (leadership / strong personality) கொண்டவர்களாக இருப்பார்கள், மற்றவர்களை அடக்கி ஆளுவார்கள். உங்களுக்குச் சொந்தமான கருத்துகளும், உறுதியான முடிவுகளும் இருப்பதால், மாமியாருடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், மன கசப்பு வர வாய்ப்புண்டு. ஆனால், எல்லா மாமியார்களுக்கும் இது பொருந்தாது. ஜாதகத்தில் மாமியார் ஸ்தானம், அதாவது 4ஆம் இடத்தின் உரிமையாளரைப் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜாதகமும் வெவ்வேராக இருக்கும்
ஆயில்யம் நட்சத்திரம் குணாதிசயங்கள் - இயல்பு
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் ரொம்ப கூர்மையான அறிவும், எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக ஆராயும் திறனும் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுக்குத் தெரியாத விசயங்களை நீங்கள் எளிதில் பிடித்துவிடுவீர்கள்.
புதன் பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால், உங்களுக்கு இயற்கையாகவே சிறந்த பேச்சாற்றலும், மற்றவர்களை ஈர்க்கும் காந்தக் கண்களும் இருக்கும். நீங்கள் பேசும்போது மக்கள் வச்ச கண் வாங்காமல் கேட்பார்கள். உங்கள் கண்கள் உங்கள் மனதின் ஆழத்தைப் பறைசாற்றும்.
எதையும் முன்கூட்டியே அறியும் உள்ளுணர்வு (Intuition) உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். மற்றவர்கள் மனதில் நினைப்பதை, முன் கூட்டியே கண்ப்பிர்கள். "இவர் என்ன சொல்லப்போகிறார்?" என்று அவர் வாய் திறப்பதற்கு முன்பே நீங்கள் கண்டுபிடித்துவிடுவதுண்டு. இந்த உள்ளுணர்வு உங்களுக்குப் பெரும் பலமாகும்; அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போ சில சமயம் அதிகப்படியான சந்தேகமாகவும் மாறிவிடும்.
கடக ராசியில் (Cancer) வருவதால், குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருப்பீர்கள். குறிப்பாக தாய் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பீர்கள். தாயின் வார்த்தைகள் உங்களுக்கு வேதவாக்கு, தாய் வாக்கு தெய்வ வாக்கு என்பிர்கள். அவளைப் புண்படுத்துவது உங்களால் முடியாத காரியம்.
நீங்கள் எதையும் அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டீர்கள். உங்கள் மனதுக்குள் பல இரகசியங்களை (secrets) வைத்திருப்பீர்கள். நீங்கள் ஒரு புத்தகம் போல அதாவது மூடிய புத்தகம்; யார் உங்களுக்கு நெருக்கமானவர்களோ, அவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளடக்கம் தெரியும்.
மற்றவர்களிடம் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். ஒருத்தரை உடனே நெருங்கி விட மாட்டீர்கள், மற்றவைகளையும் உங்களிடம் சிக்கிரம் நெருங்க விடம மாட்டீர்கள்; முதலில் அவர்களைக் கவனிப்பீர்கள், ஆராய்வீர்கள், அப்புறம்தான் நம்புவீர்கள். இருந்தாலும், உங்களுக்குக் கோபம் வந்தால் வார்த்தைகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும், அதை கட்டுபடுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் வெட்டும் பார்வையோ, கூரிய வார்த்தைகளோ எதிராளியை அதிர்ச்சியில் ஆழ்த்தும். ஆனால் கோபம் தணிந்ததும் உள்ளுக்குள் வருத்தப்படுவீர்கள். "ஐயோ, அப்படியெல்லாம் சொல்லியிருக்கக் கூடாது" என்று பின்னர் பச்சாதாபம் அடைவீர்கள்.
பலவிதமான கலைகள், சாஸ்திரங்கள், மற்றும் வித்தைகளைக் கற்றுக்கொள்வதில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். எது ரகசியமோ, எது மர்மமோ, எது நுணுக்கமான அறிவோ அவற்றைக் கற்றுத் தேர்வதில் உங்களுக்குத் தனி ஈடுபாடு உண்டு. ஜோதிடம், தாந்திரீகம், ஆன்மிகம், உளவியல், மர்ம இலக்கியம் இவையெல்லாம் உங்களை இழுக்கும், அதில் நிபுணத்துவம் பெற வாய்ப்பும் உண்டு.
வாழ்க்கை மற்றும் திசா பலன்கள் (Dasha Periods)
இப்போது உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வரும் திசாக்களைப் பார்க்கலாம். உங்கள் ஜாதகத்தில் புதன், கேது, சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறும்.
புதன் திசை (குழந்தைப் பருவம்): நீங்கள் பிறக்கும் போதே புதன் திசையில் பிறந்திருப்பீர்கள். இது உங்கள் குழந்தைப் பருவத்தில் (தோராயமாக 0 முதல் 17 வயது வரை – புதன் திசை காலம் 17 வருடங்கள்) நடக்கும். புதன் பகவான் நல்ல கிரகம் என்பதால் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், உங்கள் குழந்தைப் பருவம் மிகவும் சுறுசுறுப்பாகவும், நல்ல அறிவாற்றலுடனும் இருக்கும். சின்ன வயதிலேயே நீங்கள் "புத்திசாலி" (intelligent) என்று ஊரில் பெயர் எடுப்பீர்கள். கேள்விகள் கேட்பதிலும், புதிதாகக் கற்றுக்கொள்வதிலும் தனி ஆர்வம் காட்டுவீர்கள்.
கேது திசை (பள்ளிப் பருவம்): கேது திசை 7 வருட காலம் (தோராயமாக 17 முதல் 24 வயது வரை) நடக்கும். நீங்கள் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி படிக்கும் காலம் இது. கேது பகவான் (Ketu) உங்கள் ஜாதகத்தில் நல்ல தொடர்பில் இருந்தால், கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். சிறுசிறு தடைகள் அவ்வப்போது வரும் அதாவது பாடங்களில் சில கடினமான சிக்கல்கள், ஆசிரியர்களின் கண்டிப்பு, நண்பர்களிடம் புரிதல் இல்லாமை போன்றவை வந்தாலும், உங்களின் உள்ளுணர்வும், வேகமான சிந்தனையும் அந்தத் தடைகளை எளிதில் உடைத்துவிடும். கேது உங்களுக்கு படிப்பில் ஆழமான புரிதலைத் ஏற்படுத்தும்.
சுக்கிரன் திசை [வாழ்வின் முக்கியக் கட்டம் (இளமை மற்றும் நடுத்தர வயது)]: சுக்கிரன் திசை 20 வருட காலம் (தோராயமாக 24 முதல் 44 வயது வரை) நடைபெறும். இது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமாகும். இந்தக் காலத்தில்தான் நல்ல வேலை, தொழில், திருமணம், சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஆகியவை நடைபெறும். சுக்கிரன் (Venus) பலமாக இருந்தால், இளமைப் பருவத்தை மிகுந்த சந்தோஷத்துடனும், செல்வச் செழிப்புடனும் கழிப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த வேலை முதல் முயற்சியலையே கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் நல்ல உறவு இருக்கும். வசதிகள் மெல்ல மெல்ல உங்களைத் தேடி வரும், மேலும் உங்கள் வளர்ச்சி நிலையானதாக இருக்கும்.
சூரிய திசை (அதிகாரத்தில் உயர்வு): சூரிய திசை 6 வருட காலம் (தோராயமாக 44 முதல் 50 வயது வரை) நடக்கும். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு அரசாங்க ஆதரவு, நல்ல பதவி உயர்வு (government support, promotions) மற்றும் சமூகத்தில் பெரிய அந்தஸ்தும் கௌரவமும் அனைத்தும் கிடைக்கும். நீங்கள் ஒரு துறையில் தலைமைப் பொறுப்புக்கு வரலாம். உங்கள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் உயர் அதிகாரிகள் கவனிப்பார்கள். செய்யும் தொழிலில் நிலையான வளர்ச்சி இருக்கும். எந்த முயற்சியிலும் வெற்றி தானாக வந்து சேரும்.
சந்திரன் திசை (பதவியிலும் வணிகத்திலும் மேலும் முன்னேற்றம்): சந்திரன் திசை 10 வருட காலம் (தோராயமாக 50 முதல் 60 வயது வரை) நடைபெறும். சந்திர பகவான் (Moon) பலமாக இருந்தால், உங்களுடைய திறமையால் செய்யும் தொழிலில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். மக்கள் தொடர்பு, உணர்ச்சிபூர்வமான முடிவுகள், கலைத்திறன் இவற்றால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் வாழ்க்கை குறித்துக் கவலை இருக்காது. இந்தக் காலத்தில் உங்கள் மன நிலை சாந்தமாக இருக்கும்.
செவ்வாய் திசை [ஓய்வுக் காலம் (முதுமை)]: உங்களுடைய ஓய்வு காலத்தில் (60 வயதிற்குப் பிறகு) செவ்வாய் திசை நடைபெறும். இது 7 வருட காலம் நடக்கும். செவ்வாய் பகவான் (Mars) நல்ல அமைப்பில் இருந்தால், முதுமைக் காலத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல், நோய் நொடி இல்லாமல், அசையாச் சொத்துக்களுடன் (வீடு, நிலம், தங்கம்), பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிப்பீர்கள். உங்களுக்கு உடல் உழைப்புத் தேவைப்படும்; தோட்ட வேலை, பயிற்சிகள், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை கடைபிடிப்பது நல்லது.
பரிகாரங்கள்
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தப் பரிகாரங்களைக் கடைப்பிடிப்பது நல்லது.
முதலில், நாக தோஷம் (Naaga Dosha) இருந்தால், அதற்குரிய பரிகாரங்களைச் செய்யுங்கள். ஆதிசேஷனை வணங்குங்கள். அஷ்ட நாகர்களுக்கு (Ashta Nagas) சர்க்கரைப் பொங்கல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுங்கள். சர்ப்ப தோஷ பரிகாரத்துக்காக கல்லில் பொறித்த நாகக் கல்லை வீட்டில் வைத்துப் வழிபடுவது நல்லது.
புன்னை மரத்தை (Punnai tree) வணங்குங்கள். புன்னை மரத்தடியில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் கயிறு கட்டி, பாலும் பழமும் நிவேதனம் செய்யவும். இந்த மரம் நாகங்களுக்கு உகந்தது.
புதன் பகவானை வணங்குங்கள். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து, முந்திரிப் பருப்பு, பச்சைப் பயறு, பச்சைக் காய்கறிகளைத் மக்களுக்கோ அல்லது கால்நடைகளுகோ தானம் செய்யவும். விநாயகர், விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் புதனுக்கு நல்லது.
உங்களுக்கு வரும் சந்தேக உணர்வு மற்றும் கோபத்தைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். யாரிடமும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான், ஆனால் எப்போதும் கண் கலங்கிய மனநிலை வைத்துக்கொள்ளக் கூடாது. தியானம், பிராணாயாமம் இதற்கு உதவும்.
இரகசியங்களை நம்பிக்கைக்கு உரியவரிடம் பகிர்ந்து கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் மனதுக்குள் பூட்டி வைத்தால், நீங்களே கஷ்டப்படுவீர்கள். நல்ல நண்பர்கள், பெற்றோர்கள், குருமார்களிடம் உங்கள் உள்ளத்தைத் திறக்கத் தயங்காதீர்கள்.
முக்கிய குறிப்பு: உங்கள் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து, புதன், கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நிலையையும், நாக தோஷம் இருந்தால் அதன் ஆரம்பத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் இந்தப் பொதுவான பலன்கள் உங்களுக்கு எப்படிப் பொருந்தும் என்று அறிய முடியும்.

நன்றி
ReplyDeletePost a Comment