வணக்கம்!
உங்களை அங்கதம் ஆரா (Angatham Aura) வலைத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான TNPSC தேர்விற்காக (TNPSC Exams, GROUP 1, GROUP 2, GROUP 3, GROUP 4) தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பயணம் உங்களுக்கு எளிதானதல்ல, பல இடைஞ்சல்கள், கஷ்டங்கள், மற்றும் அவமானம் சந்திக்க வேண்டியது வரும் ஆனால் சரியான வழிகாட்டலும், திட்டமிட்ட படிப்பும், விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் கையில்.
தமிழ்நாடு அரசு TNPSC தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை பெறுவது பலரின் கனவாக இருக்கிறது. அந்தக் கனவை நனவாக்க இரவு பகல் பராமல் தினமும் பலர் கடினமாக உழைத்து வருகிறார்கள். குறிப்பாக, தற்போது தேர்விற்கான பாடத்திட்டம் (syllabus) மிகவும் விரிவானதாக இருப்பதால், அதை எப்படிப் படிக்க வேண்டும், எதை முக்கியமாக கவனிக்க வேண்டும், எங்கு இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்விகள் பலருக்கும் எழுகிறது. இதற்கான சரியான வழிகாட்டுதலே இந்த வலைத்தளத்தின் நோக்கம்.
முன்னொரு காலத்தில் TNPSC தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பெரும்பாலும் சமச்சீர் கல்வி (Samacheer Kalvi) பாடப்புத்தகங்களை மட்டும் நன்கு படித்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போதைய தேர்வு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக தமிழ் பாடத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளன தற்போது கேள்விகள் பொதுவான அறிவு (General Studies), நடப்பு நிகழ்வுகள் (Current Affairs), மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து அதிகமாக கேட்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் ஒரே ஒரு புத்தகத்தில் மட்டுமே நம்பிக்கை வைக்காமல், பல்வேறு ஆதாரங்களை பயன்படுத்தி படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும், 2001-2005 முதல் 2006-2010 வரை உள்ள பழைய பாடத்திட்டங்களில் இருந்து கூட சில தமிழ் கேள்விகள் வருவது குறிப்பிடத்தக்கது. இது மாணவர்களுக்கு ஒரு சவாலாக இருக்கும். ஏனெனில், அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்நாடு அரசுப் புத்தகங்கள் தற்போது எளிதாக கிடைக்காது. இதை கருத்தில் கொண்டு, உங்களுக்காக அந்த முக்கியமான பழைய பாடப்புத்தகங்களை தொகுத்து, இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 2001-2005 தமிழ் பாடபுத்தகங்கள் (Tamil nadu Old School Books 2001-2005) மற்றும் 2006-2010 (Tamil nadu Old School Books 2006-2010) அணைத்து பாடபுத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த பதிவுகள் மூலம் நீங்கள் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களை ஒரே இடத்தில் இருந்து எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும். ஒவ்வொரு புத்தகமும் உங்கள் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, அடிப்படை அறிவை (basic concepts) வலுப்படுத்த இந்த புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை.
எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அனைத்து பதிவுகளையும் கவனமாகப் படித்து, உங்கள் அறிவை மேம்படுத்துங்கள். தொடர்ந்து பயிற்சி செய்து, முந்தைய ஆண்டுகளின் கேள்வி தாள்களையும் முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சியுடன் இந்த வளங்கள் சேரும் போது, வெற்றி நிச்சயம் உங்களுக்கே வரும். விடா முயிற்சி விஸ்வருப வெற்றி.
இறுதியாக, உங்கள் விடா முயற்சி, பொறுமை மற்றும் தொடர் கடின உழைப்பே உங்களை வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும் என்பதை மறக்க வேண்டாம். அங்கதம் ஆரா வலைத்தளம் உங்கள் பயணத்தில் ஒரு சிறிய வழிகாட்டியாக இருந்து உதவுகிறது என்பதில் மகிழ்ச்சி.
நன்றி!
2001-2005 தமிழ் பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய (Click Here)
2006-2010 அணைத்து பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய (Click Here)

Post a Comment